யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்தில் இளைஞர்கள் இருவர் மீது சரமாரி வாள்வெட்டு

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று மாலை வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் இருந்த இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரணைமடு சந்திக்கு அருகில் பேருந்தில் பயணித்த இளைஞர்கள் மீது சரமாரி வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 46 times, 1 visits today)