200 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் இருவர் கைது
போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கைது செய்யப்பட்டனர்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலிற்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 23 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் 200 போதை மாத்திரைகளுடன் நேற்று இரவு (12) கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணையின் பின்னர் இன்று (13) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)