இலங்கையில் வீதி விபத்துக்களில் பறிபோகும் உயிர்கள்; 24 மணி நேரத்தில் மூவர் பலி!
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 3 வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் – கொழும்பு வீதியில் வாகன விபத்தில் சிக்கிய வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார் பாதிக்கப்பட்டவரை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அடையாளம் தெரியாத பாதிக்கப்பட்டவர் 65 முதல் 70 வயதுடையவர் என நம்பப்படுகிறது.
சடலம் தற்போது சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு-கொழும்பு வீதியில் பேலியகொடையில் லொறி ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் எப்பாவெல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய மற்றைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வட்டுக்கோட்டையில் 17 வயதுடைய இளைஞன் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் வேறொன்றில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் அவரது பின்னால் சென்ற இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.