பிரித்தானியாவில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இரு பெண்கள் படுகொலை!
பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் தினத்தன்று மில்டன் கெய்ன்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஆண் மற்றும் ஒரு வாலிபர் பலத்த காயம் அடைந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
38 மற்றும் 24 வயதுடைய இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தேம்ஸ் பள்ளத்தாக்கு பொலிஸார் தெரிவித்தனர். அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மில்டன் கெய்ன்ஸைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் கொலை முயற்சி தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிறிஸ்மஸ் தினத்தன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு கிடைத்த புகாரிற்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.





