இரண்டு வாரம் போட்டித்தடை – பகிரங்கமாக மன்னிப்பு கோரிய மெஸ்ஸி

PSG கழகத்தின் வீரர் மெஸ்ஸி காணொளி ஒன்றின் மூலம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மெஸ்ஸி தனது குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், இரண்டு வாரங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
வியாபார நோக்கில் அனுமதி பெறப்படாமல் மேற்கொண்டிருந்த இந்த பயணத்தை அடுத்து மெஸ்ஸிக்கு இரண்டு வாரம் போட்டித்தடை விதித்தது PSG கழகம்.
இந்நிலையில், இன்று ஒரு காணொளி ஒன்றின் மூலம் அவர் மன்னிப்புக்கோரியுள்ளார்.
“போட்டியின் பின்னர் ஒருநாள் சுதந்திரமாக நான் சுற்றுலாப்பயணத்தை மேற்கொள்ளலாம் என எண்ணியிருந்தேன்.
என்னால் அதை இரத்துச் செய்ய முடியவில்லை. எனது அணி வீரர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். கழகம் எடுக்கப்போகும் முடிவுக்காக காத்திருக்கிறேன்.” என தனது காணொளியில் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)