யாழ்ப்பாணத்தில் இரு வாகனங்கள் தீவைத்து எரிப்பு

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் பட்டா வாகனம் என்பன இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
குறித்த வன்முறைச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 19 times, 1 visits today)