பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவர் கைது!
தற்போது டுபாயில் தலைமறைவாகியிருக்கும் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பைச் செயல்படுத்தி வந்த இரண்டு பாதாள உலகக் கும்பல்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெல்லம்பிட்டிய கொடுவில மற்றும் அவிசாவளை மீகஹவத்த ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் டுபாயில் மறைந்துள்ள பாதாள உலகத் தலைவர்களின் நெருங்கிய நம்பிக்கையாளர்கள் என்றும், இலங்கையில் தொடர் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பொறுப்பானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, சந்தேகநபர்களில் ஒருவர் கொடுவில பிரதேசத்தில் உள்ள தனது சகோதரருக்கு சொந்தமான வீட்டின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் மற்றும் 54 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.
அவிசாவளை மீகஹவத்தையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலின் பேரில் வெலிவேரிய கும்புக்கேட்டவத்த வீடொன்றில் இருந்து 13.680 கிராம் ஹெரோயின் கையிருப்பு மீட்கப்பட்டுள்ளது.