பிரான்சில் இரண்டு டிராம்கள் மோதி விபத்து – 68 பேர் காயம்
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரத்தின் மத்திய நிலையத்தில் இரண்டு டிராம்கள் மோதியதில் 68 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிறுத்தப்பட்டிருந்த ஒரு டிராம், தெரியாத காரணங்களுக்காக சரிவில் பின்னோக்கி நகர்ந்து, நின்று கொண்டிருந்த மற்றொரு டிராமில் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த உயிரிழப்பும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மோதல் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.





