ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து – 21 பேர் பலி!
தெற்கு ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் மாட்ரிட்டிலிருந்து தெற்கே சுமார் 360 கிமீ (223 மைல்) தொலைவில் கோர்டோபா (Cordoba ) மாகாணத்தில் உள்ள அடமுஸ் (Adamuz) அருகே நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முதலாவதாக பயணித்த ரயில் தடம் புரண்டு தண்டவாளத்தில் விழுந்த நிலையில், இரண்டாவதாக வந்த ரயில் அதனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த 18 பேர் ஏற்கனவே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், சிலர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருப்பதாகவும் பிராந்திய சுகாதாரத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்ட் (Oscar Puente) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





