ஐரோப்பா

இத்தாலியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு ரயில்கள் – 17 பயணிகள் படுகாயம்

இத்தாலியில் நேற்று இரவு இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 17 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு இத்தாலியின் பாயின்சா – ஃபோர்லின் நகரங்களுக்கு இடையே நேற்று இரவு அதிவேக ரயிலும், பிராந்திய ரயிலும் நேருக்கு மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 17 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினரும், ரயில்வே துறையினரும் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து அந்நாட்டு ரயில் சேவையை இயக்கும் ட்ரெனிட்டாலியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ரயில்கள் மிகவும் மெதுவாக வந்து மோதிக்கொண்டதால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது 17 பயணிகளுக்கு சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளன. ரயில்கள் மோதிக்கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

https://twitter.com/i/status/1734012709421846977

இந்த ரயில் விபத்தில் தீயணைப்பு துறையினர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இரு ரயில்களின் இன்ஜின்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக விரைவு ரயில் இன்ஜின் மோதியதில் பிராந்திய ரயிலின் இன்ஜின் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இத்தாலி துணை பிரதமுரும், போக்குவரத்துத் துறை அமைச்சர் மெட்டோ சால்வினோ கூறுகையில், “ரயில் விபத்துக்கு பிறகு நிலைமையை கண்காணித்து வருகிறேன். விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!