தமிழர் பகுதியில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!
பூவரசம்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாளம்பன்குளம் பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் தவறிவிழுந்து மாணவர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர்.
வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பல பாடசாலைகளுக்கு இடையில் எல்லை போட்டி வியாழக்கிழமை (17) நடைபெற்றது.

அதில் பங்கேற்க வந்திருந்த பண்டுவஸ்நுவர பிரதேசத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுகளுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு மரணித்துள்ளனர்.

விளையாட்டுப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் இருந்து வெளியேறி, சற்று தூரத்தில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்த போதே, இவ்விருவரும் காலிடறி நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்துவிட்டனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)





