இந்தோனேசியாவில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கங்களில் ஒன்றின் அருகே பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர் குழுவுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பப்புவான் பிரிவினைவாத தலைவர்கள் கொல்லப்பட்டதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.
சுதந்திர பப்புவா இயக்கத்தின் சுதந்திர கிளர்ச்சியாளர்களுக்கும் மத்திய பப்புவா மாகாணத்தில் உள்ள பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் அவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் குழுவின் இராணுவப் பிரிவான மேற்கு பப்புவா விடுதலை இராணுவத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.
இரு கமாண்டர்களின் அடையாளம் இனங்காணப்பட்டுள்ளதாக கூட்டுப் பாதுகாப்புப் படைக்கு தலைமை தாங்கிய பைசல் ரமதானி தெரிவித்தார்.
மேலும் உறுதிப்படுத்துவதற்காக இருவரது உடல்களையும் சிறையிலுள்ள விடுதலை இராணுவத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் காண்பித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் பல கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பப்புவாவில் உள்ள கிளர்ச்சியாளர்கள் 1960 களின் முற்பகுதியில் இருந்து இந்தோனேசியா பிராந்தியத்தை இணைத்ததில் இருந்து குறைந்த அளவிலான கிளர்ச்சியுடன் போராடி வருகின்றனர்.