லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது
கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட சிசிடி வளாகத்தினுள் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர், ஒரு இலட்சம் ரூபா பணத்தை கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் ‘USDT’ எனப்படும் இலத்திரனியல் நாணயத்தை மாற்றும் இணையவழி வர்த்தகத்தின் ஊடாக மோசடியான பணப் பரிமாற்றம் தொடர்பில் CCD யில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் இரு பொலிஸார் முறைப்பாட்டாளரிடம் தெரிவித்திருந்தனர்.
குறித்த நபர் ஆரம்பத்தில் ரலஞ்சத்தின் முதல் கொடுப்பனவாக இரண்டு பொலிஸாருக்கும் 300,000 ரூபாய் வழங்கப்பட்டது, மீதி ரூபாயை பெற்றுக்கொள்ளும் போது இருவரும் கைது செய்யப்பட்டதாக CIABOC தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.