அமெரிக்காவில் ஓடுபாதையில் பயணித்தபோது மோதிய இரு விமானங்கள்!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா விமான நிலையத்தில் ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று புறப்படுவதற்காக டாக்சியில் சென்றுகொண்டிருந்தபோது ஜெட் விமானம் ஒன்று குறுக்கிட்ட நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக விமானத்தின் வாள் பகுதியே மோதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
(Visited 34 times, 1 visits today)





