இலங்கையில் பாடசாலை மாணவியின் உயிரை பறித்த இரு மாத்திரைகள்
 
																																		பாடசாலை மாணவி ஒருவர் வௌ்ளிக்கிழமை (10) காலை இரண்டு மாத்திரைகளை விழுங்கியதால் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலபிட்டிய மரதான பிரதேசத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலப்பிட்டிய ரேவத கல்லூரியில் கல்வி கற்கும் வலிமுனி டினுஜி மௌவிஸ்ம மென்டிஸ் (வயது 13) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த சிறுமி வீட்டில் இருந்து இரண்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தியதால் மாணவி உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று (10) பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி திருமதி கே.கவாகராச்சியினால் நடத்தப்படவிருந்தது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
        



 
                         
                            
