இலங்கை

கிண்ணியாவில் படகு கவிழ்ந்து பரிதாபமாக இருவர் பலி

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஈச்சந்தீவு கலப்பு பகுதியில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த உதயரூபன் ஐஸ்மன் (18வயது) மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த புஷ்பராஜா (45) ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, ஐந்து பேர் கொண்ட குழுவினர் படகில் பயணித்ததாகவும் இதனை அடுத்து படகு கவிழ்ந்ததாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சடலத்தை பார்வையிட்டு விசாரணை முன்னெடுத்த பின்னர் உடல் கூற்று அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

அத்துடன் குறித்த ஐவரும் ஏன் படகில் பயணித்தனர் என்பது பற்றிய விபரங்கள் தெரியாமல் உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!