இலங்கையில் இருவர் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – ஒருவர் காயம்
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹானெவிய வீதி, வள்ளிவல பிரதேசத்தில் இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டிற்குள்ளான இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் T56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்களின் சடலம் வெலிகம வலான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன்டன், காயமடைந்தவர்கள் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)