அமெரிக்காவின் வட கரோலினாவில்(North Carolina) நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம்
தென்கிழக்கு வட கரோலினாவில் (North Carolina) ஒரு இரவு விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 13 பேர் மீது தாக்குதல் நடந்துள்ளதாகவும் அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும் ரோப்சன் (Robeson) காவல்துறை அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தென் கரோலினா எல்லைக்கு அருகிலுள்ள ராலேயிலிருந்து (Raleigh) சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாக்ஸ்டனுக்கு (Maxton) வெளியே உள்ள ஒரு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணைகளை தொடர்ந்து, “இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாகத் தோன்றுவதால் சமூகத்திற்கு தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும், இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் பெயர்கள் உட்பட துப்பாக்கிச் சூடு பற்றிய கூடுதல் தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.





