பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் இந்திய மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு
வடக்கு பிலிப்பைன்ஸில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்திய மாணவர் விமானி மற்றும் அவரது பிலிப்பைன்ஸ் பயிற்றுவிப்பாளர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செஸ்னா 152 ரக விமானத்தின் சிதைவுகள், காணாமல் போன ஒரு நாள் கழித்து, மலைப் பிரதேசமான அபயாவோவில் உள்ள லூனா நகராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டதாக, பிலிப்பைன்ஸின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAP) தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
டோக்சுரி சூறாவளி இப்பகுதியில் வீசிய சில நாட்களுக்குப் பிறகு, செவ்வாயன்று வடக்கு மாகாணமான இலோகோஸ் நோர்டேவில் உள்ள லாவோக் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், மதியம் விமானத்தின் போது வானிலை “தெளிவாக” இருந்ததாகவும் CAAP கூறியது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று CAAP தெரிவித்துள்ளது.