பாரிஸில் ஒன்றாக சந்தித்துக்கொண்ட உலக பெருங்கோடீஸ்வரர் இருவர்

உலக பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்கும், இரண்டாம் இடத்தில் உள்ள பெர்னார்டு அர்னால்ட்டும் பாரிஸில் ஒன்றாக சேர்ந்து மதிய உணவருந்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
ஆடம்பர பொருட்களுக்கு பெயர் பெற்ற லூயி வீட்டோன் நிறுவனத் தலைவர் பெர்னார்டு அர்னால்ட் உடன் அவரது இரு மகன்களும் வந்திருந்தனர். அதேபோல எலான் மஸ்க் உடன் அவரது தாயார் வந்திருந்தார்.
அதை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்ற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்கிற்கு சென்று இருவரும் உரையாற்றினர்.
இந்த நிலையில் இருவரின் சந்திப்பை தொடர்ந்து இரு பெருங்கோடீஸ்வர்கள் இணைந்து முதலீடு ஏதேனும் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
(Visited 28 times, 1 visits today)