இலங்கையில் அறிமுகமான இரண்டு புதிய மாதுளை வகைகள்
இலங்கையில் விவசாய செய்கைக்கு ஏற்ற இரண்டு புதிய மாதுளை வகைகளை விவசாய திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என்ற இரண்டு புதிய மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய திணைக்களத்தின் ஹோமாகம தாவர வைரஸ் அடையாள நிலையம் முன்னெடுத்த ஆய்வுகளின் அடிப்படையில், குறித்த இரண்டு புதிய வகை மாதுளைகளும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மாலி பிங்க், லங்கா ரெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு புதிய மாதுளை வகைகளையும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிவப்பு நிற மாதுளைகளுக்கு மாற்றீடாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மாதுளைகளுக்கான இறக்குமதி செலவினத்தை கட்டுப்படுத்த முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு மாதுளை மரத்தின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது மற்றும் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மரத்திலிருந்தும் 20-25 கிலோ மாதுளை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு மொத்தம் 400 மரங்கள் நடுவதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ. ஒரு ஏக்கருக்கு 8 மில்லியன் ரூபாய் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
குறிப்பாக இந்த இரண்டு வகை மாதுளைகளும் உலர் வலயத்தில் சாகுபடிக்கு ஏற்றது,
இதன்படி, இந்த நாட்டிற்குள் விளைவிக்கக்கூடிய விவசாய பயிர்களை மேலும் இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையில் ஏற்றுமதி பயிர்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துமாறு விவசாய திணைக்களத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்