ஐரோப்பா

உக்ரேனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் இரு விமான நிலையங்கள் மூடல்

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து உக்ரேன் ஆளில்லா வானூர்தித் தாக்குதலை நடத்தியதால் இரு விமான நிலையங்கள் மூடப்பட வேண்டியிருந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாஸ்கோவை நோக்கிச் சென்ற ஒன்பது உக்ரேனிய வானூர்திகளை ரஷ்ய ஆகாயத் தற்காப்புப் பிரிவுகள் அழித்ததாக மேயர் செர்கெய் சோப்யனின் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) கூறினார்.

விடிய விடிய நடந்த தாக்குதல்களில் வானூர்திகளின் சிதைவுகள் விழுந்த இடங்களுக்கு அவசரகாலச் சேவை முடுக்கிவிடப்பட்டதாக அவர் சொன்னார். இதில் பொருட்சேதம் ஏற்பட்டதாக அவர் தகவல் கூறவில்லை.

வானூர்தித் தாக்குதலால் துலா பகுதியில் உள்ள அஸோட் வேதியியல் ஆலையில் சிறிது நேரம் தீ மூண்டதில் இருவர் காயமுற்றனர். கலுகா வட்டாரத்தில் ஏழு வானூர்திகள் அழிக்கப்பட்டதாக வட்டார ஆளுநர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், விமானப் பயணப் பாதுகாப்பை உறுதிசெய்ய வினுகோவோ, டோமோடிடோவோ விமான நிலையங்களில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!