பிரித்தானியாவில் மேலும் இரு பாலியல் குற்றவாளிகள் தவறுதலாக விடுதலை!
பிரித்தானியாவின் சிறைச்சாலைகளில் இருந்து மேலும் இரு வன்முறை அல்லது பாலியல் குற்றவாளிகள் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை செயலாளர் டேவிட் லாமி (David Lammy) தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 31 வரை 91 கைதிகள் இவ்வாறு தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக நீதி அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சராசரியாக வாரத்திற்கு மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் 12 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருப்பதாக டவுனிங் ஸ்ட்ரீட் (Downing Street) விவரித்துள்ளது.
நிதி பற்றாக்குறை, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் இவ்வாறான விடுதலைகள் இடம்பெற்றுள்ளதாக சிறை அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தவறுதலாக விடுவிக்கப்பட்டவர்கள் குறித்து ஒரு சுயாதீன விசாரணை தொடங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





