பாகிஸ்தானில் மேலும் இரு சுங்க அதிகாரிகள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சுங்க அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று 03 நாட்களுக்குள் 07 சுங்க அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில், சுங்கப் புலனாய்வுத் துறையின் ஐந்து அதிகாரிகளும், ஐந்து வயது சிறுமி உட்பட இரண்டு பொதுமக்களும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டனர்.
இனந்தெரியாத ஆயுததாரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.





