சிங்கப்பூர் கோயில் உண்டியலில் ஆயிரக்கணக்கான பணத்தை திருடிய இருவர்
சிங்கப்பூர் சாங்கி வீதியில் உள்ள கோயில் ஒன்றின் உண்டியலில் இருந்து பணம் திருடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று இரண்டு திருடர்கள் உண்டியலில் இருந்து பணத்தை திருடியதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கதவுகளின் பூட்டை மாற்ற போவதாகவும் கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
நள்ளிரவு 1.50 மணியளவில் ஹூன் சியான் கெங் கோவில் கதவுகளின் பூட்டில் இரண்டு பேர் கைவரிசை காட்டும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
சம்பவத்தின்போது கோவில் மூடப்பட்டிருந்தது என்றும், நள்ளிரவு 2.20 மணிக்கு பொலிஸார் தொடர்பு கொண்டதாகவும் கோவில் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
கோவில் மண்டபத்தில் ஆட்கள் யாரும் இல்லாததை கண்டு கொண்ட திருடர்கள், காணிக்கை பெட்டியில் பணம் இருக்கிறதா என்பதை டார்ச்லைட் அடித்து சோதனை செய்துள்ளனர். பின்னர் குச்சியில் பசை தடவி பணத்தை கொள்ளையடித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
கோவிலில் பாதுகாப்பில் இருந்த பெண் ஒருவரை கண்டதும் திருடர்கள் தப்பி ஓடியதாகவும், பின்னர் கோவில் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களுக்கு அந்த பெண் தகவல் அளித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
எவ்வளவு பணம் திருடப்பட்டது என்பதை கோயில் நிர்வாகம் கூறவில்லை.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.