பிரித்தானியாவில் சீக்கியப் பெண்ணை இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது

கடந்த மாதம் பிரித்தானியாவில் சீக்கியப் பெண் ஒருவர் இனரீதியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 9ம் திகதி சாண்ட்வெல்லின் (Sandwell) ஓல்ட்பரி (Oldbury) பகுதியில் 20 வயது பிரிட்டிஷ் சீக்கியப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் அளித்ததை தொடர்ந்து கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
“சாண்ட்வெல்லைச் சேர்ந்த 49 வயது ஆணும் 65 வயது பெண்ணும் இன்று பாலியல் வன்கொடுமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்” என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன ரீதியாக மோசமான பாலியல் வன்கொடுமைக்கு காரணமானவர்களைக் கைது செய்து தண்டிக்க வழிவகுத்த தகவல்களுக்கு 20,000 பவுண்டுகள் வெகுமதியாக வழங்குவதாக இங்கிலாந்தின் குற்ற எதிர்ப்பு தொண்டு நிறுவனமான க்ரைம்ஸ்டாப்பர்ஸ் (Crimestoppers) அறிவித்துள்ளது.