ஐரோப்பா செய்தி

உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் இருவர் மரணம்

உக்ரைன்(Ukraine) முழுவதும் ஒரே இரவில் ரஷ்யா(Russia) நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதில் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மின்சாரம் தடைபட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) குறிப்பிட்டுள்ளார்.

200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் சுமி(Sumy), கார்கிவ்(Kharkiv), டினிப்ரோ(Dnipro), சபோரிஷியா(Zaporizhia), க்மெல்னிட்ஸ்கி(Khmelnytskyi) மற்றும் ஒடேசா(Odessa) பகுதிகளில் தாக்குதல் நடந்ததாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், “எரிசக்தி உள்கட்டமைப்பில் நிலைமை மோசமாக உள்ளது, ஆனால் அனைத்து சேவைகளையும் விரைவாக மீட்டெடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என்று ஜெலென்ஸ்கி Xல் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவுடனான கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால மோதலை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்(Donald Trump) நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்காவிற்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!