நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடந்த பேரணியில் இருவர் மரணம்

அரசியலமைப்பு முடியாட்சியை மீட்டெடுக்கக் கோரி நடைபெற்ற போராட்டக் கூட்டத்தை கலைக்க நேபாள கலகத் தடுப்புப் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், தண்ணீர் அடித்தனர். இதனால் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க அதிகாரிகள் பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது என்றும், பின்னர் வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட இருவரில் போராட்டக்காரர்களில் ஒருவரும் பேரணியைச் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளரும் அடங்குவர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தினேஷ் குமார் ஆச்சார்யா தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் ஒரு தனியார் வீடு மற்றும் ஒரு வாகனத்திற்கு தீ வைத்ததாகவும், மூன்று போலீசார் உட்பட 17 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.