ஆசியா செய்தி

பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் குண்டு வெடித்ததில் இருவர் மரணம்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ளது, கைபர் பக்துங்க்வா (Khyber Pakhtunkhwa) பிராந்தியம்.

இதன் தலைநகரம், பெஷாவர் (Peshawar). கடந்த சில வருடங்களாக, பாகிஸ்தானில் பல இடங்களில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

போர்ட் பஜார் (Board Bazaar) பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்தவர் அங்குள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் (Lady Reading Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வெடித்த குண்டுகள், 4லிருந்து 5 கிலோகிராம் வரை எடை கொண்டவை என்றும் நடைபெற்றது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

(Visited 18 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி