மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு பேர் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்,
இஸ்ரேலிய இராணுவம் ஜெனின் பகுதியில் உள்ள “பயங்கரவாதப் பிரிவை” குறிவைத்ததாகக் தெரிவித்தது.
“இஸ்ரேலியப் படைகள் நகரின் மையத்தில் ஒரு கார் மீது குண்டுவீசித் தாக்கியதை அடுத்து, இரண்டு உடல்கள் ஜெனின் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன” என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம்”இஸ்ரேலிய ஆளில்லா விமானம்” மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஜெனின் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியதாக ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் தெருவின் நடுவில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரிவதைக் காட்டியது, சில படங்கள் எரிந்த காரைச் சுற்றி ஒரு கூட்டம், கதவுகளைத் திறக்க முயற்சிப்பதைக் காட்டியது.