காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இருவர் மரணம்
காசாவில்(Gaza) இஸ்ரேல்(Israel) நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள்(Palestinians) கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் ஹமாஸ்(Hamas) போராளி ஒருவரை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மருத்துவ அதிகாரிகள் உடனடியாக கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணவில்லை. மேலும், இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
காசா சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அதே போல் மூன்று இஸ்ரேலிய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.





