டெல்லியில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் மரணம்
டெல்லியின்(Delhi) பிதம்புரா(Pitampura) கிராமத்தில், அட்டைப் பெட்டிகளை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
தற்காலிக தகரக் கொட்டகைகளின் கீழ் அட்டைப் பெட்டிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த காலி இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக அளவில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், காயப்பட்டவர்கள் ஜஹாங்கிர்புரியில்(Jahangirpuri) உள்ள பாபு ஜகஜீவன் ராம்(Babu Jagjivan Ram) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்கள் பிரேஷ் மற்றும் சதீஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





