இத்தாலி நாட்டவர்கள் இருவர் இலங்கையில் கைது – விசாரணையில் வெளிவந்த தகவல்

இரண்டு இத்தாலிய பிரஜைகள் கடகமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
யால தேசிய பூங்காவில் இருந்து சேகரித்த நூற்றுக்கணக்கான உள்ளூர் பூச்சி மற்றும் தாவர இனங்களை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றதாகக் கூறப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை புதன்கிழமை கடகமுவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இலங்கையிலுள்ள வண்ணத்துப்பூச்சிகள் உட்பட 285 பூச்சிகளை சேகரித்து வைத்திருந்த ஏராளமான கண்ணாடி குவளைகளை கைப்பற்றியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)