கட்டுநாயக்கவில் வைத்து கினி நாட்டை சேர்ந்த இரு பெண்கள் கைது!

கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கி கடந்த முற்பட்ட கினி நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 500 கிராம் கொக்கெய்னை சிறிய பகுதிகளாக விழுங்கி குறித்த பெண்கள் கடத்த முற்பட்டுள்ளதாக கட்டுநாய்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான பெண்கள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
(Visited 21 times, 1 visits today)