இந்தியா

6 மாத கர்ப்பிணி கட்டிலில் கட்டி வைத்து எரித்துக் கொலை… கணவனின் கொடூர செயல்!

பஞ்சாப் மாநிலத்தில் 6 மாத கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து தீவைத்து எரித்துக் கொன்ற கணவனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டம், ரய்யா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுக்தேவ் – பிங்கி தம்பதி. இதில் பிங்கி 6 மாதம் கர்ப்பமாக இருந்தார். கருவில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்தது. இதனிடையே, கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு பிங்கி அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதெல்லாம் சுக்தேவ் அவரைச் சமாதானம் செய்து திரும்ப அழைத்து வந்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

Mumbai: Fire breaks out in Wadia Hospital, no injuries reported – India TV

இந்நிலையில், கணவன் மனைவி இடையே நேற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுக்வேத், மனைவியை கட்டிலில் படுக்க வைத்து கயிற்றால் கட்டினார். பின்னர் கட்டிலில் கிடந்த தலையணை, பெட்சீட் போன்றவற்றில் தீயை வைத்துவிட்டு தப்பித்துச் சென்றார். இந்த தீ கட்டிலில் கட்டி வைக்கப்பட்டிருந்த பிங்கி மீதும் பிடித்தது. தீயின் உக்ரம் தாங்கமுடியாமல் அலறித் துடித்த பிங்கி, சற்று நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த பொலிஸார், பிங்கியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சுக்தேவ் மீது கொலை வழக்குப் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். இரட்டைக் குழந்தைகளை வயிற்றில் சுமந்திருந்த கர்ப்பிணி பெண்ணை, கணவனே கட்டிலில் கட்டி வைத்து தீ வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே