ஈரான் சிறையில் இருந்து இரண்டு பிரெஞ்சு நாட்டவர்கள் விடுதலை
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானில்(Iran) தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிரெஞ்சு நாட்டினரை விடுவித்துள்ளதாக பிரான்ஸ்(France) ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட ஈரானிய மாணவருக்குப் பதிலாக இந்த விடுவிப்பு வந்துள்ளது.
41 வயது செசிலி கோஹ்லர்(Cécile Kohler) மற்றும் 72 வயது ஜாக் பாரிஸ்(Jacques Paris) ஆகியோர் எவின்(Evin) சிறையில் இருந்து வெளியேறி தெஹ்ரானில்(Tehran) உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு செல்லும் வழியில் உள்ளனர்” என்று மக்ரோன் Xல் பதிவிட்டுள்ளார்.
மே 2022ல் ஒரு சுற்றுலா பயணத்தின் போது கைது செய்யப்பட்ட இந்த ஜோடி, ஈரானில் தடுத்து வைக்கப்பட்ட கடைசி பிரெஞ்சு நாட்டினர் என்று நம்பப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் இஸ்லாமியக் குடியரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல வெளிநாட்டு மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களில் செசிலி கோஹ்லரும் ஜாக் பாரிஸும் அடங்குவர்.
குறித்த இருவரும் உளவு பார்த்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டனர்.





