இலங்கை: இரண்டு முன்னாள் அமைச்சர்களிடம் CID விசாரணை
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) வருகை தந்துள்ளார்.
இதேவேளை, வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சரும் இரண்டாவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்துள்ளார்.
ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் இருந்ததை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.





