நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த இரு வெளிநாட்டினர் கைது!
செல்லுப்படியாகும் விசாக்கள் இன்றி நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் பிரித்தானிய பிரஜைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியத் தலைநகர் டெல்லியில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலை அடுத்து உத்தரபிரதேச மாநிலத்தின் ருபைதிஹா எல்லையில் (Rupaidiha) பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த எல்லை இந்தியர்களுக்கும் நேபாள மக்களுக்கும் திறந்திருக்கும், ஆனால் வெளிநாட்டினர் இரு நாடுகளுக்கும் விசாக்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதி அமுலில் உள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரும் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் செல்லுபடியாகும் விசாக்களை கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவிற்கு வருகை தந்தமைக்கான திருப்திகரமான காரணத்தை வழங்கவில்லை எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.




