இலங்கை

தலைமன்னாரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

தலைமன்னாரிலிருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்காக படகு ஒன்றில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில் தலை மன்னார் மீனவர்கள் குறித்த மீனவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் குறித்த மீனவர்களை தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் கடல் கொந்தளிப்பு மற்றும் கடும் காற்றின் காரணமாக கச்சத்தீவில் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார் கிராமம் கடற்கரையிலிருந்து வட கடலில் இரு மீனவர்கள் ஒரு படகில் வலிச்சல் மூலம் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் வழமையாக கரை திரும்பும் நேரத்தில் கரை திரும்பாததால் இப் பகுதி மீனவர்கள் கடலில் இவர்களை தேடுவதில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை (13) மாலை வரை அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களைத் தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் காற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக உடன் கரை திரும்ப முடியாத நிலையில் கச்சத்தீவில் தரித்து நிற்பாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன இரு மீனவர்களும் தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான ஜே.நிக்சன் டிலக்ஸ் கூஞ்ஞ மற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரி. சுமித்திரன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மீனவர்களை தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்