பிரான்ஸில் நடுவானில் விபத்துக்குள்ளான இரு போர் விமானங்கள்!
இரண்டு பிரெஞ்சு மிராஜ் போர் விமானங்கள் நடுவானில் விபத்துக்குள்ளானதால் விமானிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வடகிழக்கு பிரான்சின் Autreville இல் இன்று காலை ஜெட் விமானங்கள் மோதிக்கொண்டன.
சம்பவத்தின் போது ஒரு விமானி வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 33 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததால் விபத்து நடந்த இடம் விரைவாக சுற்றி வளைக்கப்பட்டது. 11 வாகனங்களும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
(Visited 41 times, 1 visits today)





