ஆஷஸ் தொடரில் இருந்து இரு வேகப்பந்து வீச்சாளர்கள் விலகல்
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி நாளை அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் இருந்து இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹெசில்வுட்(Hazlewood) காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அதே நேரத்தில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்(Mark Wood) காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.





