சீதுவ பிரதேசத்தில் 4 வயது குழந்தை உட்பட இரண்டு சடலங்கள் மீட்பு

சீதுவ, ரத்தொலுகம பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து நான்கு வயது குழந்தை உட்பட இரண்டு சடலங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி நான்கு வயது சிறுமி மற்றும் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட குடியிருப்பு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் மாமா என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட ஆண், தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
(Visited 11 times, 1 visits today)