எகிப்தில் இரண்டு ரயில்கள் விபத்துக்குள்ளானதில் இருவர் மரணம்

வடகிழக்கு கெய்ரோவின் ஷர்கியா கவர்னரேட்டிலுள்ள ஜகாசிக் நகரில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர் என்று எகிப்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் மற்றும் “மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில்களில் ஒன்று ஜகாசிக் நகரிலிருந்து இஸ்மாலியா நகருக்குச் சென்று கொண்டிருந்ததாகவும், மற்றொன்று மன்சௌரா நகரிலிருந்து ஜகாசிக் நகருக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் ரயில்வே அதிகாரசபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 26 times, 1 visits today)