இங்கிலாந்தில் கோர விபத்து – இருவர் பலி
இங்கிலாந்தின் கிழக்கு யார்க்ஷயரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவத்தை பார்த்தவர்கள் அல்லது தொடர்புடைய கேமரா காட்சிகள் உள்ளவர்கள்
பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விபத்துக்குப் பிறகு குறித்த பகுதியில் அமைந்துள்ள வீதி மூடப்பட்டிருந்த நிலையில்
மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





