ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ள இரு நிறுவனங்கள்!
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கு இரண்டு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.
அவை சீனாவின் Gotune இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் இந்தியாவின் ஜியோ பிளாட்ஃபார்ம் ஆகும்.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 50.23% பங்குகளை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் இங்கிலாந்தின் லைகா குழுமத்தின் பெட்டிகோ கொமர்சியோ இன்டர்நேஷனல் ஆகியவை டெலிகாம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்க முன்வந்துள்ளன.
ஆனால் நிதியமைச்சகத்தின் சிறப்பு திட்டக் குழுவும், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு கலந்துரையாடல் குழுவும் டெலிகாம் வாங்குவதற்கு முன் தகுதி பெற்ற போட்டி நிறுவனங்களாக ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவனத்தையும் சீனாவின் Gotune International Investment Holdings நிறுவனத்தையும் தேர்ந்தெடுத்துள்ளன.
இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் வணிகத்திற்கு சொந்தமானது ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்.
ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 107 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஃபோர்ப்ஸ் வர்த்தக இணையதளத்தின்படி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளார்.
உலக வங்கியுடன் இணைந்த சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், இலங்கை டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கான விசேட ஆலோசனை அமைப்பாக செயற்படுகிறது.