அமெரிக்காவில் ரசாயன கடத்தலில் ஈடுபட்ட சீன நிறுவன அதிகாரிகள் இருவருக்கு சிறைத்தண்டனை
போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை கடத்தியதற்காக சீன நிறுவன அதிகாரிகள் இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
வுஹானை தளமாகக் கொண்ட அமர்வெல் பயோடெக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி கிங்ஜோ வாங் மற்றும் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் யியி சென் ஆகியோர் பிப்ரவரியில் நியூயார்க்கில் ரசாயன இறக்குமதி மற்றும் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
மாவட்ட நீதிபதி பால் கார்டெஃப், வாங்கிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் சென்னுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
ஜூன் 2023ல், அமெரிக்காவிற்குள் இரசாயனங்களை கடத்தியதாக நீதித்துறையால் குற்றம் சாட்டப்பட்ட எட்டு சீன நாட்டவர்கள் மற்றும் நான்கு சீன நிறுவனங்களில் வாங் மற்றும் சென் ஆகியோர் அடங்குவர்.





