தென்காசியில் இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் மரணம்
தமிழ்நாட்டின் தென்காசி(Tenkasi) மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மதுரையிலிருந்து(Madurai) செங்கோட்டைக்குச்(Senkottai) சென்ற தனியார் பேருந்தும் தென்காசியில் இருந்து கோவில்பட்டி(Kovilpatti) நோக்கிச் சென்ற மற்றொரு பேருந்தும் மோதிக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற கீசர்(Keysar) நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநரின் வேகம் மற்றும் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 28 பயணிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்ட சிலரின் நிலை மோசமாக உள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்(M.K. Stalin) இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.




