இலங்கையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 40 பேர் காயம்

மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆறு பேர், கவலைக்கிடமான நிலையில், மாத்தறை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)