லிபியாவில் விபத்துக்குள்ளான இரு படகுகள் – நால்வர் உயிரிழப்பு!
லிபியாவில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதில், குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தலைநகர் திரிப்போலியில் (Tripoli) இருந்து கிழக்கே சுமார் 118 கி.மீ தொலைவில் உள்ள கடலோர நகரமான அல் கும்ஸுக்கு (Al Khums) அப்பால் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் வங்கதேசத்தை சேர்ந்த 26 குடியேறிகள் பயணித்ததாகவும் மற்றொரு படகில் இரண்டு எகிப்தியர்கள் மற்றும் சூடானியர்கள் உட்பட 69 பேர் பயணித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நால்வர் உயிரிழந்த நிலையில் எஞ்சியவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் முதலுதவி அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் மற்றும் வறுமையின் பிடியில் உள்ள லெபனானிய மக்கள் பாதுகாப்பிற்காகவும், வாழ்கை தேடியும் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து செல்கின்றனர். இதன்போது பல இறப்புகள் பதிவாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.




