இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இரு வங்கதேச பெண்கள் கைது
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையின் போது, டேராடூனின்Dehradun) படேல் நகர்(Patel Nagar) பகுதியில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்து வந்த இரண்டு வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் 9ம் திகதி உத்தரகண்ட்(Uttarakhand) மாநிலமாக 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் முக்கிய நிகழ்வை முன்னிட்டு நடத்தப்பட்ட தீவிர சோதனை நடவடிக்கையின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வங்கதேசத்தின் பர்குனா(Barguna) மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வாதி உபாத்யாய் என்ற மரியம் மற்றும் கோமில்லா(Comilla) மாவட்டத்தைச் சேர்ந்த ஷிவ்லி அக்தர் என்ற சனா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெவ்வேறு காலங்களில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, வெவ்வேறு இடங்களில் வசித்த பிறகு, டெல்லியில் ஒருவரை ஒருவர் சந்தித்து பின்னர் ஒன்றாக டேராடூனுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் தங்குவதற்காக அவர்கள் இந்திய குடிமக்களை மணந்ததாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் விரைவில் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று டேராடூன் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





